2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
ஃபிஃபா தரவரிசை: 9 ஆண்டுகளில் மிக மோசமான நிலையில் இந்திய கால்பந்து அணி!
இந்திய ஆடவர் கால்பந்து அணி மிக மோசமான நிலையைச் சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணி ஃபிஃபா தரவரிசையில் 133-ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்த போட்டிகளில் இந்திய கால்பந்து அணி மோசமாக தோல்வியைச் சந்தித்து வருகின்றன.
ஆசிய கோப்பை தகுதிப் போட்டியில் ஹாங்காங் உடன் 0-2 என என இந்தியா தோற்றது.
கடைசியாக இந்திய அணி 2016-இல் 135-ஆவது இடத்தில் இருந்தது. 1996-இல் 95-ஆவது இடத்தில் இருந்ததே இந்தியாவின் அதிகபட்ச தரவரிசையாக இருக்கிறது
தொடர் தோல்விகளால் தடுமாறும் இந்திய அணி
கிரிக்கெட்டில் உலகில் முக்கியமான அணியாக இருக்கும் இந்தியா கால்பந்தில் மிக மோசமாக நிலையிலேயே இருக்கிறது.
இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் சமீபத்தில் வெளியேறினார். அவருடைய ஓராண்டு காலத்தில் 8 போட்டிகளில் 1-இல் மட்டுமே வென்றிருந்தது.
ஹாங் காங் உடன் தோற்றதால் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை 2027-இல் தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டில் இந்தியா விளையாடிய போட்டிகளில் 1 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளைச் சந்தித்தது.
மகளிரணி சமீபத்தில் ஆசிய கோப்பையில் தேர்வாகி சாதனை படைத்தது.
இந்த மோசமான நிலையினால் சுனில் சேத்ரி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார். ஆனாலும் அணியில் பெரிதாக மாற்றமில்லை.
ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சிங்கப்பூருடன் அக்டோபர் மாதம் இந்திய அணிக்கு அடுத்த போட்டி வரவிருக்கிறது.
உலக அளவில் 210 நாடுகள் இருக்கும் ஃபிஃபா தரவரிசையில் ஆர்ஜென்டீனா முதலிடத்தில் நீடிக்கிறது.
ஃபிஃபா தரவரிசைப் பட்டியல்
1. ஆர்ஜென்டீனா
2. ஸ்பெயின்
3. பிரான்ஸ்
4. இங்கிலாந்து
5. பிரேசில்
6. போர்ச்சுகல்
7. நெதர்லாந்து
8. பெல்ஜியம்
9. ஜெர்மனி
10. குரேசியா