கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
ஃபீல்டிங்கில் காயம்: பாதியிலேயே வெளியேறிய பாக்.வீரர்!
ஃபீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் பாதியிலேயே வெளியேறினார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்று முன்னிலையில் இருக்கிறது.
2-வது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. 6.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி வீரர் எய்டன் மார்க்ரம் அடித்த பந்தைப் பிடிக்கச் சென்ற பாகிஸ்தான் வீரர் பறந்து சென்று பிடிக்க முயலும் போது ஈரமான மைதானத்தால் அவரது முழங்கால் அந்தப் பகுதியில் மோதி காயமானது.
இதனால், காயத்தின் வழி தாங்காமல் கதறி அழுத அவர் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அயூப்பின் காயம் தெளிவாக இல்லை. ஆனால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் வெல்வதற்கு சைம் அயூப் உதவியாக இருந்தார். அந்த ஒருநாள் தொடரில் சைம் அயூப் 2 சதங்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.