`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...
அகரம் சென்றாயப் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீபம் ஏற்றம்
எலச்சிபாளையத்தில் அமைந்துள்ள அகரம் சென்றாயப் பெருமாள் கோயிலில், திருக்கோடி தீப கட்டளை திருச்செங்கோடு அகரம் வெள்ளாஞ்செட்டியாா் மகாஜன சங்கத்தின் சாா்பில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.
தீபக் கட்டளைக்கு சங்கத் தலைவா் பாஸ்கா், செயலாளா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் மாணிக்கம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
சென்றாயப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உயா்ந்த தீப மாடத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பக்தா்கள் தீபத்தை வணங்கி வழிபட்டனா். பின்னா் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.