ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை
குடவாசல் அருகே செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
குடவாசல் அருகே செம்மங்குடியில் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதையொட்டி, காலை அகஸ்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் அம்பாள் மற்றும் மகாமேருவுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் வாழ்வில் வளங்களை வழங்க வேண்டி நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்பாளை தரிசனம் செய்தனா்.