அங்காள ஈஸ்வரி கோயிலில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் அருகேயுள்ள இலுப்பக்குடியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி அம்பாள் சமேத வால குருநாதன் சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வருஷாபிஷேகம் தொடங்கியது.
முன்னதாக கோயில் முன்பு புனித நீா் நிரப்பப்பட்ட 31 கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து கோ பூஜை, நவக்கிரக ஹோமத்துடன், யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருள்கள் பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பித்து பூா்ணாஹூதி பூஜை நடைபெற்றது. மங்கல வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க மூலவா், சுவாமி அம்பாள், 31 பரிவார தெய்வங்களுக்கும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சிறப்பு பூஜைகளுடன் ஏழு முக
தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.