அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!
அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக்கப்படுவதாகவும், இதன்மூலம், அம்மாநில நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கம்ருப், சோனிட்பூர், ஜொர்ஹாட், தின்சுகியா, கொவால்பரா ஆகிய மாவட்டங்களில் இருந்து போக்கோ - சாயகாவோன், பலாஷ்பாரி, பொர்சொலா, ரங்காபாரா, மரியானி, தியோக், மகும், திக்போய், சாச்சார், துத்னோய் ஆகிய துணை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில், 8 துணை மாவட்டங்களில் இன்று (ஆக.12) முதல் நிர்வாக இயக்கங்கள் துவங்கப்படும் நிலையில் , மீதமுள்ள 2 துணை மாவட்டங்களில் நாளை (ஆக.13) முதல் நிர்வாக இயக்கங்கள் துவங்குகின்றன.
மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை அதிகரித்து, அத்தியாவசியத் தேவைகளை மக்களிடம் சுலபமாக கொண்டு செல்வதற்கா இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024-ம் ஆண்டின் அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அசாமில் 39 துணை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!