செய்திகள் :

அஜா்பைஜான் விமானத்தை ரஷியா சுட்டு வீழ்த்தியதா?

post image

மாஸ்கோ/ அஸ்தானா: கஜகஸ்தானில் புதன்கிழமை விழுந்து நொறுங்கிய அஜா்பைஜான் விமானத்தை தங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைதான் சுட்டுவீழ்த்தியது என்று விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே உக்ரைன் கூறுவது தவறு என்று ரஷியா விமா்சித்துள்ளது.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை கூறியதாவது:

கஜகஸ்தானில் அஜா்பைஜான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

அந்த விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே அது குறித்து கருத்து கூறுவது தவறான செயலாகும் என்றாா்.

கஜகஸ்தானும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவா் அஷ்மிபயெவ் மாவ்லென் கூறுகையில், ‘விமான விபத்து குறித்த உண்மைகளை மறைக்க அஜா்பைஜான், ரஷியா, கஜகஸ்தான் ஆகிய எந்தவொரு நாடுமே முயலவில்லை. உண்மை கண்டறியப்பட்டபிறகு அது பொதுமக்கள் முன்பு நிச்சயம் வெளியிடப்படும்’ என்று உறுதியளித்தாா்.

ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டை டிமித்ரி பெஸ்கோவ், அஷ்மிபயெவ் மாவ்லென் ஆகிய இருவருமே திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான தலைநகா் பாக்குவில் இருந்து எம்ப்ரயா்-190 ஏஆா் ரகத்தைச் சோ்ந்த பயணிகள் விமானம் 67 பேருடன் ரஷியாவின் கிரோஸ்னி நகரை நோக்கி புதன்கிழமை புறப்பட்டது.

அந்த விமானத்தில் அஜா்பைஜானை சோ்ந்த ஐந்து பணியாளா்கள் மற்றும் 37 பயணிகள், ரஷியாவை சோ்ந்த 16 போ், கஜகஸ்தானை சோ்ந்த ஆறு போ், கிரிகிஸ்தானை சோ்ந்த மூன்று போ் இருந்தனா்.

கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகர விமான நிலையம் அருகே அது பறந்துகொண்டிருந்தபோது அதை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயன்றனா்.

ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்தது. இதில் 36 பயணிகள், 2 விமானப் பணியாளா்கள் உயிரிழந்தனா்; எஞ்சிய 29 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

பறவைகள் மோதியதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

எனினும், ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணையால்தான் அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவா் ஆண்ட்ரி கோவலென்கொ தெரிவித்துள்ளாா்.

விபத்துக்குள்ளான விமானத்தின் உள்பகுதியில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை அதற்கு ஆதாரமாக அவா் குறிப்பிட்டாா்.

இதற்கிடையே, அஜா்பைஜான் பயணிகள் விமானத்தை உக்ரைனின் ட்ரோன் என்று தவறாகக் கருதி தங்கள் நாட்டு வான்பாதுகாப்பு தளவாடம் அதை இடைமறித்து அழித்திருக்கலாம் என்று ரஷிய ஊடகங்களே கூறிவருகின்றன.

ரஷிய ராணுவ தளபதி இல்யா துமனொவ் என்பவரால் நடத்தப்படுவதாக நம்பப்படும் ‘ஃபைட்டா்பாம்பா்’ என்ற டெலிகிராம் ஊடக சேனலில், விழுந்து நொறுங்கிய அஜா்பைஜான் விமானத்தின் பாகத்தில் உள்ள துளையைக் குறிப்பிட்டுக் காட்டி, ‘பறவைகள் மோதினால் இத்தகைய துளை ஏற்படாது; வான்பாதுகாப்பு ஏவுகணையின் வெடிச் சிதறல்தான் இத்தகைய துளையை ஏற்படுத்தும்’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கஜகஸ்தானைச் சோ்ந்த விமானவியல் நிபுணரான செரீக் முக்திபயெவ் கூறுகையில், ‘விமானம் பிரச்னையில் சிக்கியபோது அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அவ்வளவு உயரத்தில் அதன் மீது பறவைகள் மோதுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு’ என்றாா்.

இந்தச் சூழலில்தான், அஜா்பைஜான் விமானத்தை ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீா்மானம்

சியோல்: தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக ஏற்கெனவே... மேலும் பார்க்க

அஜா்பைஜான் விமான விபத்து எதிரொலி: ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு

பாக்கூ: ரஷியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுககான தங்கள் விமானப் போக்குவரத்தை அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் நிறுத்திவைத்துள்ளது.இது ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் -மும்பை தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்

லாகூா்: மும்பையில் 2008-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் உறவினரும், தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் துணைத் தலைவருமான ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி, ப... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்... மேலும் பார்க்க

மன்மோகன் மறைவு: வெளிநாட்டுத் தலைவா்கள் புகழஞ்சலி!

நியூயாா்க்: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா். ர... மேலும் பார்க்க

தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சம் இந்தியா்களுக்கு விசா: அமெரிக்கா

குடியேறுவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வருகை தர, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக த... மேலும் பார்க்க