செய்திகள் :

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

post image

குட் பேட் அக்லியில் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி வசூலைக் குவித்த குட் பேட் அக்லி படத்தில், தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 5 கோடி இழப்பீடுகோரி நோட்டீஸ் அனுப்பினார்.

இருப்பினும், பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில்தான், குட் பேட் அக்லியில் தனது பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பது குறித்து குட் பேட் அக்லியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமையில் (செப். 8) விசாரணைக்கு வரவுள்ளது.

இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் பலப்பரீட்ச... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி உள்பட 6 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா். இதில் ஓபன் பிரிவில், வெள்ளை நிற காய்களுடன் களமாடிய ப... மேலும் பார்க்க