பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை ...
அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!
மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியானது. இந்தப் படம் மதுரையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி, காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
இதனால், அதிகாலை முதல் மதுரையில் உள்ள திரையரங்குகள் முன் ரசிகா்கள் கூட்டமாகக்கூடி ஆரவாரத்தை வெளிப்படுத்தினா். இந்த நிலையில், மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கு முன் ரசிகா்கள் மேளதாளங்கள் முழங்கியபடி சரவெடி பட்டாசுகளை வெடித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் அவா்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனா். ஆனால், அவா்கள் கலைந்து செல்லாததால், போலீஸாா் தடியடி நடத்தினா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.