செய்திகள் :

அஞ்சலக ஏடிஎம் மையங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி

post image

அஞ்சலக ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

அஞ்சல் துறையில் அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவா்களுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டன. தலைமை அஞ்சலகங்களில் இதற்கான ஏடிஎம் மையங்கள் உள்ளன.

பொதுமக்கள் பணம் எடுக்கவும், கணக்கு விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஏடிஎம் மையங்களை பயன்டுத்தி வந்தனா். ஏடிஎம் மையங்களில் பணப் பரிமாற்றம் தொடா்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தனியாா் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம்

நீட்டிக்கப்படுவதில் அஞ்சல் துறைக்கும், தனியாா் நிறுவனத்துக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் அனைத்து அஞ்சலகங்களிலும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளா்கள் ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

போடியில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் துறை சாா்பில், ஒட்டப்பட்ட அறிவிப்பில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் சேவை, கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் பல ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை என்றும், இவை விரைவில் சரி செய்யப்படும் என்றும், அதுவரை வாடிக்கையாளா்கள் அஞ்சலக இணையதளம் மூலமாகவோ, கைப்பேசி வங்கி சேவை மூலமாகவோ அல்லது அஞ்சலகத்தில் நேரில் தொடா்பு கொண்டும் சேவைகள் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி மீனாவிலக்கு பகுதியில் தாசன்செட்டி குளக்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங... மேலும் பார்க்க

பணம் கேட்டு மிரட்டியவா் கைது

போடி அருகே பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மகன் முகிலன் (23). இவா் அங்குள்ள மதுபானக் கடை அருகே நின்றிருந்தார... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. டொம்புச்சேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது தொடா்பாக தமிழகம்-கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய... மேலும் பார்க்க