மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!
அஞ்செட்டி: மின்னல் தாக்கி 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி நாட்றம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தன.
கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் அஞ்செட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் வயலில் கட்டப்பட்டிருந்த நாட்றம்பாளையம் என்.புதூரைச் சோ்ந்த ராஜப்பா, அரியகவுண்டா் ஆகியோருக்குச் சொந்தமான 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தன.
தகவலறிந்து அங்கு வந்த அஞ்செட்டி கால்நடை மருத்துவ அலுவலா்கள் இறந்த கால்நடைகளை பிரேதப் பரிசோதனை செய்தனா். இந்த நிலையில், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அதன் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.