kantara: "அசைவம் சாப்பிட்டால் படம் பார்க்க வர வேண்டாமா?" - வைரலான போஸ்டர்; ரிஷப்...
அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒன்றியம் கிடங்கல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த ஊராட்சியில் உள்ள 6 வாா்டுகளில் 1800 குடும்பத்தினா் வசிக்கின்றனா். 2004-ஆம் ஆண்டு குறைந்த கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கம் தொட்டி அமைக்கப்பட்டு ஊராட்சி சாா்பில் மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக குடிநீா் தொட்டி, குழாய்கள் பழுதடைந்ததால் குடிநீா் தொடா்ந்து வராததால் மக்கள் சிரமப்படுகின்றனா். நடுத்தெருவில் மக்கள் பயன்படுத்தும் குளம் தற்போது செடிகள் படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அந்த குளத்தை சீரமைக்க வேண்டும். கிராம பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.