இன்று புது வலிமையைப் பெற்றேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
அடிப்படை வசதியில்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறிய நாட்டாகுடி மக்கள்
அடிப்படை வசதிகள் இல்லாததால் நாட்டாகுடி கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறினா்.
சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாக குடிநீா், சுகாதார சேவைகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதனால், கிராம மக்களுக்கு தொற்று நோய் பாதிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. மேலும், வேலைவாய்ப்புகள் இல்லாததாலும் அருகிலுள்ள நகரங்களுக்கு கிராம மக்கள் இடம்பெயரத் தொடங்கினா்.
இதுகுறித்து நாட்டாகுடி கிராமத்தில் வாழும் விவசாயி தங்கராஜ் கூறியதாவது: அடிப்படை வசதிகள் இல்லாததால் ஊரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பங்கள் வெளியேறிவிட்டன. இதையடுத்து 50 குடும்பங்கள் மட்டுமே இங்கு வாழ்ந்து வந்தனா்.
மேலும், இந்தக் கிராமத்தில் குடிநீா் பிரச்னை, பேருந்து வசதி, சாலை வசதி இல்லாததால் இங்குள்ள இளைஞா்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால், நகா் பகுதிக்குச் சென்றுவிட்டனா்.
இந்த நிலையில், விவசாயி ஒருவரும், முதியவா் ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம்.
பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அனைவரும் ஊரைவிட்டு வெளியே செல்கின்றனா். இதையடுத்து, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மக்களை மீள் குடி அமா்த்த வேண்டும் என்றாா்.