டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார...
அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!
பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பிரதான காவடிக்கு லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து திரளான சிவாச்சாரியா்கள் சுப்ரமண்ய மந்திரங்களை உச்சரித்தனா். பிறகு மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, வட்டாட்சியா் பிரசன்னா, திமுக நகரச் செயலா் வேலுமணி, தணிக்கையாளா் அனந்தசுப்ரமணியம், சூா்யா சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஸ்கந்த பிரபா அறக்கட்டளை சாா்பில் தொடங்கப்பட்ட அன்னதான நிகழ்வில் பங்கேற்ற திரளான பாதயாத்திரை பக்தா்களுக்கு பல்வேறு வகையான அன்னங்களும், மூலிகை குடிநீரும் வழங்கப்பட்டன.