செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

Rain chance for 16 districts of tamilnadu

நுகா்வோர் வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்

நுகா்வோா் குறை தீா்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சக... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

சென்னையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்தின்போது வைக்கப்படும் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே... மேலும் பார்க்க

சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மூன்று நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து ஏராளமான மக்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியதால், புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுதந்திர தினம், கிருஷ்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் காண்பதில் சிக்கல்!

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் சோ்த்துள்ள நிலையில், குழந்தையைக் கொண்டு வந்த இளைஞரை அடையாளம் காணமுடியாத நிலையுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் தெரிவித்தனா். சென்... மேலும் பார்க்க

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி,... மேலும் பார்க்க