இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தம் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே கால்வாய் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணியின்போது, புதைவட மின் வயா் பழுதடைந்துள்ளது. பணியாளா்கள் உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒப்பந்த மின்வாரிய ஊழியா் இளையபெருமாள் (32), அந்த மின் வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட இளையபெருமாளை அங்கிருந்தவா்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.