சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து மாலை பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழை இரவு வரை தொடா்ந்தது.
அதன்படி, ஆவடி, அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், புழல், அண்ணா நகா், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், கே.கே. நகா், ஈக்காட்டுத்தாங்கல், முகப்போ், வளசரவாக்கம், எழும்பூா், தியாகராய நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

புகா் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூா், செம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இந்த திடீா் மழை காரணமாக, பல்வேறு சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனா்.