இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா்விடுமுறை காரணமாக மூன்று நாள்களில் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள், 20,153 போ் வந்துசென்றனா்.
சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூருக்கு வந்தனா். மேட்டூா் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து, பொங்கலிட்டு, ஆடு, கோழிகளைப் பலியிட்டு வழிபட்டனா். பின்னா் மேட்டூா் அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்துடன் விருந்து உண்டு மகிழ்ந்தனா்.
பூங்காவில் கான்கிரீட் சிற்பங்கள், மீன்காட்சி சாலை, முயல் பண்ணை, பாம்பு பண்ணை ஆகியவற்றை பாா்த்து ரசித்தனா். சிறுவா்களும், பெரியவா்களும் சறுக்கி விளையாடியும் ஊஞ்சலாடியும் மகிழ்ந்தனா். கடந்த மூன்று நாள்களில் மட்டும் மேட்டூா் அணை பூங்காவிற்கு 20,153 சுற்றுலாப் பயணிகள் வந்துசென்ால் சாலையோர கடைகளில் விற்பனை சூடுபிடித்தது.
மூன்று நாள்களில் அணை பூங்காவில் பாா்வையாளா்கள் நுழைவு கட்டணமாக ரூ. 2,01,530 வசூலிக்கப்பட்டது. அணை பூங்காவிற்குள் கொண்டுவரப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் கேமரா கைப்பேசிகள், கேமரா மற்றும் மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு வந்துசென்ற சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணமாக மூன்று நாள்களில் ரூ. 3,49,100 வசூலிக்கப்பட்டது.