மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ஒருமுறை 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ. 2,000, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ. 6,000, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் ஐடிஐ டிப்ளமோ படிப்புக்கு ரூ. 8,000, இளங்கலை பயில ரூ.12,000, முதுகலை, எம்.பி.பி.எஸ். பயில ரூ.14,000 வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2025-26 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களில் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்/தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரியில் வரும் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.