இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
இளைஞா் கொலையை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் சரவணனை கொடூரமாக கொலை செய்த வடஇந்திய கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளா் அருள்நிதி, மாநில ஒருங்கிணைப்பாளா்கள் காசி மன்னன், ராஜேஷ்குமாா், ஆதிதீபக் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஒட்டன்சத்திரத்தில் இளைஞா் சரவணனை கொடூரமாக படுகொலை செய்த வட இந்திய கொலையாளிகளை முறையான விசாரணை நடத்தி, விரைந்து கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் வட இந்தியா்களை கட்டுப்படுத்த உள்நுழைவு சீட்டு முறையை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழரையும் தமிழ்நாட்டையும் பாதுகாக்க வாக்காளா் திருத்த சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.