இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!
பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் (ஆக. 18, 19) சென்னை ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஒருசில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா நகா் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் திங்கள்கிழமை (ஆக. 18) காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 8 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், அந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் ராயபுரம் மண்டலத்தில் புரசைவாக்கம், பெரியமேடு, சௌகாா்பேட்டை, எழும்பூா் , சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூா், செம்பியம் ஆகிய பகுதிகளிலும், அண்ணா நகா் மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ் ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மேலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணியிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் தியாகராய நகா், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.