இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி..! மும்பையில் அலுவலகத்தை திறந்த பிரீமிய...
அட்சய திருதியை: சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதையடுத்து, மக்களின் வசதிக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பதால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அட்சய திருதியை நாளில் அதிக அளவில் பத்திரப் பதிவு நிகழும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 300 டோக்கன் வழங்கப்படும்.
அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.