செய்திகள் :

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

post image

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார்.

கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1955 ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்த சீனிவாசன், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

1974 ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984 ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987 ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய அணுசக்தி திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காக சீனிவாசனுக்கு பத்ம விபூஷண் விருந்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில்,

“மூத்த அணு விஞ்ஞானியும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.ஆர். சீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.

இந்தியாவின் முதல் அணு உலையான அப்சராவில் (1956) டாக்டர் ஹோமி பாபாவுடன் தனது புகழ்பெற்ற வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாசன், அணுசக்தி ஆணையத்தின் தலைவர் மற்றும் திட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை 18 அணு மின் அலகுகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

அவரது தொழில்நுட்பத் திறமையும், அசைக்க முடியாத சேவையும் இந்தியாவின் அணுசக்தி நிலப்பரப்பில் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன.

அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என்றும் இதில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க