செய்திகள் :

அண்ணா பல்கலை. வழக்கு- மகளிர் ஆணையம் நாளை விசாரணை

post image

அண்ணா பல்கலை. வழக்கு- மகளிர் ஆணையம் நாளை விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகளிர் ஆணையம் நாளை விசாரணை மேற்கொள்கிறது. இவ்வழக்கை விசாரிக்க இன்று இரவு சென்னை வரும் மகளிர் ஆணைய அதிகாரிகள் நாளை விசாரணையை தொடங்குகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைப்பு!

இதுதொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் குற்றம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவா் என அறிந்தபோதும் முந்தைய வழக்குகளில் அவா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

இந்த அலட்சியம் குற்றங்களைச் செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து வருவது குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாராணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை... மேலும் பார்க்க

புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டம்: ஆளுநருக்கு அழைப்பு

புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் அவரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

பாஜக மகளிரணியினா் கைது: எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்

மதுரையில் பாஜக மகளிரணியினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் ஆ... மேலும் பார்க்க

‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த பிரேமலதா வலியுறுத்தல்

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 500 அரசு பள... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆன... மேலும் பார்க்க