செய்திகள் :

‘அதற்காக பாலா என்னிடம் அழுதார்..’: மிஷ்கின்

post image

இயக்குநர் பாலாவுடனான நட்பு குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.

வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வு நேற்று (டிச. 18) சென்னையில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: சண்டைப் பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்!

நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “சேது படத்தின் ஒருவரிக் கதையை எழுதியபின்பே என் படத்திற்கான திரைக்கதைகளை எழுத ஆரம்பிப்பேன். என் முதல் நான்கு படங்கள் அப்படி நிகழ்ந்ததுதான். என்னுடைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைப் பார்த்துவிட்டு பாலா நேரில் அழைத்தார். அப்படம் சரியாக ஓடவில்லை. தன்னை பாதித்ததாகச் சொல்லி அழுதார். அதற்கு முன் பாலா அழுது நான் பார்த்ததில்லை. பின், என் தயாரிப்பில் படம் இயக்குகிறாயா எனக் கேட்டார். அந்தத் தருணத்தில் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பாலா” எனத் தெரிவித்தார்.

சகுனி பட இயக்குநர் காலமானார்

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் நெஞ்சுவலி காரணமாக இன்று (டிச. 19) காலமானார். இவருக்கு வயது 54.சகுனி படத்தைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்த... மேலும் பார்க்க

விஜய் 69: விஜய்யின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது... மேலும் பார்க்க

வெங்கட் பிரபுவுடன் ஏகே - 64?

நடிகர் அஜித்தின் புதிய படத்தின் இயக்குநராக வெங்கட் பிரபு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து முடித்து இரண்டு படங்களின் அடுத்தடுத்த வெ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரத்தில் 4 குறும்படங்கள்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் 4 குறும்படங்கள் வர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் கோட்டை கட்டும் போட்டியின்போது தன்னிலை மீறி நடந்துகொண்ட ஜெஃப்ரி,... மேலும் பார்க்க

வீர தீர சூரனில் அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் கண்ணீர் விட்டேன்: சுராஜ் வெஞ்ரமூடு

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு வீர தீர சூரன் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி குறித்து பேசியுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரம... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் அறிவுரைப்படி விளையாடும் ரஞ்சித்! ரசிகர்கள் கிண்டல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் மற்றவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். முதல்முறையாக மற்றவரிடம் ரஞ்சித் இவ்வாறு பேசுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்... மேலும் பார்க்க