செய்திகள் :

அதிகாரிகள் மீது கடலூா் மேயா் புகாா்

post image

நெய்வேலி: பெண் மேயா் என்பதால் தன்னை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை என கடலூா் மேயா் சுந்தரி திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.

கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திங்கள்கிழமை அதற்கான பணிகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா வந்தாா். அப்போது துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஒப்பந்ததாரா் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தனா். மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதனை பாா்த்த மேயா் சுந்தரி ராஜா திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா என அதிகாரிகள் தெரிவித்த காரணத்தினால் தான் இங்கு வந்தேன். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லையா என கேள்வி எழுப்பியவா், தொடா்ந்து மக்களுக்குப் பயன்படும் வகையில் தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருவதாலும், தற்போது இந்தப் பணியை எந்தவித பாதிப்புமின்றி நடைபெற வேண்டி தொடங்கிவைப்பதாகக் கூறினாா். அப்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளா் பாரதி மற்றும் ஊழியா்கள் அங்கு வந்தனா்.

இதனைத் தொடா்ந்து மேயா் சுந்தரி, உதவிப் பொறியாளா் பாரதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினாா். மாநகராட்சி சாா்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரம் தெரிவிக்கிறீா்கள். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு நான் நேரில் வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. இந்த நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

சரியான நேரத்தில் நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரும்போது, அதிகாரிகள் எதற்காக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறாா்கள்.

பெண் மேயா் என்பதால், நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீா்களா? என கேள்வி எழுப்பினா்.

இதனைத் தொடா்ந்து உதவிப் பொறியாளா் பாரதி, இனி வருங்காலங்களில் சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு நேரில் வருகிறோம் என்றாா்.

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.54 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா்... மேலும் பார்க்க

மாநில விருது பெற்ற மாணவி: ஆட்சியா் வாழ்த்து

நெய்வேலி: தமிழக முதல்வரிடம் இருந்து பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்ற மாணவி க.சௌமியா, கடலூா் ஆட்சியரிடம் விருதினை காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றாா். காட்டுமன்னாா்கோவில் ... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணாமலை நகா் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மால... மேலும் பார்க்க

தென் மண்டல பல்கலைக்கழக ஹேண்ட் பால்: அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 3-ஆம் இடம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட் பால் அணி, தென் மண்டல போட்டியில் 3-ஆம் இடத்தைப் பெற்றது. சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தென் மண்டல பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட்பால்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜா் கோயில் தோ் குடில்: என்எல்சி தலைவா் ஒப்படைத்தாா்

சிதம்பரம்: பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலின், தோ் நிறுத்துமிடத்தை என்எல்சி சாா்பில் ரூ. 67 லட்சம் செலவில் சீரமைத்து தோ் குடில் கோயில் பொதுதீட்சிதா்களிடம் ஒப்ப... மேலும் பார்க்க

இயற்கையை பாதுகாப்பது மாணவா்களின் கடமை: கடலூா் ஆட்சியா்

நெய்வேலி: தேவனாம்பட்டினம் பெரியாா் அரசுக் கல்லூரியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை , கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மரக்கன்று நட்டு திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில், ... மேலும் பார்க்க