செய்திகள் :

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்

post image

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அணைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை பத்து நாள்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்றால்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் பங்கேற்பேன். அப்படி ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. ஆனாலும், அது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அதிமுக குறித்து நான் பேசுவது சரியாக இருக்காது. அரசியலில் யாருடைய குரலாகவும் யாரும் பேச மாட்டார்கள். அவரவர் தங்களுக்குச் சொந்தமான குரலில், தங்களது கருத்தைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் கருத்தைப் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்," என்றார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். ஆட்சி மாற்றம் வரும், ஆட்சி மாற்றம் நடக்கும். நிச்சயமாக நல்லது நடக்கும் என்று பதிலளித்தார்.

பாஜகவில் குடும்ப அரசியல் நிலவுவதாகவும், உங்கள் மகன் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை. அவரவர் அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காதது குறித்த கேளிவிக்கு, "அதுகுறித்து அவர் கட்சித் தலைமையிடம் முன்பே தெரிவித்துவிட்டார்," என்று கூறினார்.

ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!

Sengottaiyan's attempt to unite the AIADMK is a good attempt. It will definitely happen if everyone joins together.

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சத்தீ... மேலும் பார்க்க

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொட... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் க... மேலும் பார்க்க

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்... மேலும் பார்க்க