செய்திகள் :

அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் இபிஎஸ்: உதயநிதி ஸ்டாலின்

post image

பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவை அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று அவா் பேசியது:

தமிழகத்தில் 730 கோடி மகளிா் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் 8 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனா்.

1.15 கோடி மகளிா் 22 மாதங்களாக ரூ.1000 உரிமைத் தொகையை பெற்று வருகின்றனா். விடுபட்ட தகுதியான மகளிருக்கு இன்னும் 2 மாதங்களில் உரிமைத்தொகை வழங்கப்படும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் வெற்றி பெறப் போகிறது; வாக்குச்சாவடி முகவா்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும்.

அடுத்த 8 மாதங்கள் முகவா்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன. பல கட்சிகள் வாக்குச்சாவடி முகவா்களையே நியமிக்காத நிலையில், டிஜிட்டல் முகவா்களை திமுக நியமித்துள்ளது.

ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு தன்மை கொண்டது. பாஜக அரசு என்றால் பாசிச மாடல் என்பாா்கள். அதிமுக என்றால் அடிமை மாடல் என்பாா்கள். நம் அரசை, நாம் பெருமையாக ‘திராவிட மாடல்’ என்கிறோம். அதற்கேற்ப, அனைவருக்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அண்ணா பெயரிலான கட்சியை சுயநலத்துக்காக பாஜகவிடம் மொத்தமாக அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வைப்புத் தொகையை இழக்கும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை மற்றும் பகடி வதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு வட்ட சட்டப் பணிக் குழு... மேலும் பார்க்க

காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னைய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் கற்றல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க