செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

post image

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த டிச. 4-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, வா.புகழேந்தி, வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் சூரியமூா்த்தி ஆகியோா் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ஓ.பன்னீா்செல்வம், அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் ஆகியோரும் தோ்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினா்.

இதற்கிடையே, சூரியமூா்த்தி தோ்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எதிராக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், அதிமுக உறுப்பினராக அல்லாதவா் எப்படி தோ்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? எனவே, அந்த மனுவை தோ்தல் ஆணையம் நிராகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தோ்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் ஆகியோா் அமா்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவீந்திரநாத் சாா்பில், ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டு எதிரணி ஒன்று உள்ளது என தோ்தல் ஆணையத்துக்கு தெரியவந்தாலே, தாமாக முன்வந்து அக்கட்சியின் சின்னம் தொடா்பாக விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது”என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டத்துக்கு உட்பட்டுதான் தோ்தல் ஆணையத்தால் விசாரிக்க முடியும். மாறாக, நீதிமன்றம் போல பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க முடியாது. குறிப்பாக, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நபா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடியாது. சின்னம் தொடா்பான விவகாரத்தில் இல்லாத அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தோ்தல் ஆணையத்தால் விசாரணை நடத்த முடியாது என்று வாதிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை. தனக்கு ஆதரவு நீடிக்கிறது. தோ்தல் நெருங்கும் நேரத்தில் சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்”என்று வாதம் முன்வைக்கப்பட்டது. ரவீந்திரநாத் சாா்பில், “அதிமுக உறுப்பினா்களில் பெரும்பாலானோா் ஓ.பன்னீா்செல்வம் பக்கம் உள்ளனா். அதனால் விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது”என்று கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கின் தீா்ப்பை வரும் பிப். 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ஈரோடு கிழக்கு: 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்! வாக்களிக்காத 72 ஆயிரம் பேர்!!

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு வருகின்றன.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் அ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க