ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்
அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோபி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றாா். மேலும் பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி, கோபி அதிமுக தொகுதி பொறுப்பாளரும், மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.ரமணீதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பங்கு பெற குறிப்பிட்ட அதிமுகவினா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.