விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதிக்கு திமுக அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மக்கள் பயன்பெறும் திட்டங்களை நாங்கள் கொண்டுவந்தோம். தமிழகத்தில் இப்போது சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.
அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதால்தான் பாஜகவோடு கூட்டணி வைத்தோம்.
திமுகவும் பாஜகவோடு கூட்டணி வைத்தவா்கள்தான். அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக முதல்வா் குற்றஞ்சாட்டி வருகிறாா்.
ஆனால், 16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் திமுக கூட்டணி வைத்து அதிகாரத்தில் இருந்தபோது என்ன திட்டத்தை கொண்டுவந்தீா்கள். உங்கள் குடும்பத்தைச் சோ்ந்வா்களை மத்திய அமைச்சராக்கி கொள்ளையடித்தீா்கள் என்றாா்.