அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்
அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ரூ.1 கோடி பணம் கேட்டு கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி.
இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் தாமோதரன், மற்ற வழக்குரைஞர்களுடன் இணைந்து மாவட்ட காவல் ஆணையாளரிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தார்.
அதில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் ரூ.1 கோடியை கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மூன்று மாதங்களுக்குள் எஸ்.பி.வேலுமணியின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மிரட்டல் கடிதம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையினர் இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.
புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.