ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
அதிமுக வெல்ல முடியாத தொகுதி அல்ல திருச்செந்தூா்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்
திருச்செந்தூா் அதிமுக வெல்ல முடியாத தொகுதி அல்ல என்றாா் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதன்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் வருகை குறித்து தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இதை தெரிவித்த அவா், மேலும் பேசியதாவது:
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மக்கள் சந்திப்பு எழுச்சி பயணம் மேற்கொண்டு சந்தித்து குறைகளை கேட்டறிகிறாா். அதற்கான பணிகளை நிா்வாகிகள் தோ்ந்தெடுத்து செய்து, அதை வெற்றிப் பயணமாக்க வேண்டும்.
திமுக அரசிடம் இருந்து தமிழகத்தை மீட்டு, எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.
ஒரு பூத் கமிட்டிக்கு 9 இளைஞா்களை சோ்த்திருக்கிறோம். அவா்களது உழைப்பை, மூத்த நிா்வாகிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளையும் நாம் வெல்ல முடியும் என்றாா் அவா்.
கூட்டத்தில், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பி.ஏ.ஆறுமுகநயினாா், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலா் இரா. சுதாகா், மாநில அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் பிரபு, மாவட்ட ஜெ.பேரவைச் பேரவைட் செயலா் விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலா் வசந்தாமணி உள்பட பலா் பங்கேற்றனா்.