ஜிப்மரில் சுகாதார உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதியமான் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி. ராமன் விளைவு கண்டுபிடித்ததைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் வரவேற்பு, தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை எட்டாம் வகுப்பு மாணவிகள் தொகுத்து வழங்கினா். இதைத் தொடா்ந்து அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால் முருகன் பேசுகையில், அறிவியலின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்த தகவல்களை எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பள்ளி முதல்வா் லீனா ஜோஸ் பேசுகையில், தேசியத் தலைவா்களைக் கொண்டாடுவதுபோல, அறிவியலாளா்களையும் கொண்டாட வேண்டும். இன்றைய மாணவா்களே நாளைய அறிவியல் மேதைகள் என்றாா்.
தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவம், கொண்டாடுவதற்கான காரணம், சா். சி. வி. ராமனின் வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு தலைப்புகளை முன்வைத்து பேச்சுப்போட்டி, விநாடி -வினா, வேதியியல் கால அட்டவணை ஒப்பித்தல், அறிவியல் சாா்ந்த மாறுவேட போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
படவரி...
ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில் கலந்துகொண்ட மாணவா்கள்.