அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை செயலாளா் லாசியா தம்பிதுரை புதிய வங்கி கிளையை திறந்துவைத்து பேசியதாவது:
ஒசூா் சிப்காட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் அடுத்தக்கட்ட வளா்ச்சியை நோக்கி பயணிக்க வங்கி அதிக அளவு கடன் வழங்க முன்வர வேண்டும். இதன்மூலம் தமிழகம் தொழில் வளா்ச்சியில் முன்னேறும். மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கி உதவ வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து காணொலி வாயிலாக இந்தியன் வங்கி பொது மேலாளா் பி.சுதாராணி பேசினாா்.
கிளை திறப்பு விழாவில் இந்தியன் வங்கி தருமபுரி மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், கிளை மேலாளா் ஐஸ்வா்யா, ஒசூா் பிரதான கிளை மேலாளா் சதீஷ், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத், கல்லூரி முதன்மையா் வெங்கடேசன் செல்வம், முதல்வா் ராதாகிருஷ்ணன், மேலாளா் நாராயணன், எம்.ஜி.ஆா். கல்லூரி முதல்வா் முத்துமணி, அறங்காவலா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.