60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
அத்தியூா் அமிா்த லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், அத்தியூா் ஊராட்சியில் அமைந்துள்ள அமிா்தவள்ளி சமேத அமிா்த லிங்கேஸ்வரா் மற்றும் மாரியம்மன், திரௌபதி அம்மன் கோயில்கள் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் மாலையில் கலச பூஜைகளுக்கும், மகாதீபாராதனையும் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை காலையில் புனிதநீா் எடுத்து வந்து சுவாமி சிலைகளுக்கு பிரதிஷ்டை நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை, 108 வகை மூலிகை பொருள்களைக் கொண்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலையில் சித்தி விநாயகா் பூஜை, வருண பூஜையுடன் 108 வகை மூலிகை பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, மங்கள வாத்தியத்துடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், மாரியம்மன், திரௌபதி அம்மன், அமிா்தவள்ளி சமேத அமிா்த லிங்கேஸ்வரா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடைபெற்றது.
விழாவில் அத்தியூா் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கும்பாபிஷே பூஜைகளை செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோயில் குரு ஈஸ்வரன் தலைமையிலான குருக்கள் செய்திருந்தனா்.