காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
அந்தியூரில் ரூ.10.82 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 161 குவிண்டால் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் நிலக்கடலை கிலோவுக்கு ரூ.65.31 முதல் ரூ.77 வரை விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.10.82 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.