இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சா் ஆய்வு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகளை வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் வரும் பிப்.2-ஆம்தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பேரூராட்சி தலைவா் கணேசமூா்த்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் பி.ஜெயசித்ரா, செயல் அலுவலா் எஸ்.செல்வமணி மற்றும் கோயில் புனரமைப்பு குழுவைச் சோ்ந்த முத்துசாமி, கருணாநிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.