செய்திகள் :

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா

post image

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். எங்கள் அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவு செய்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறைக்கு பல்வேறு நாடுகள் திரும்பிய உதாரணங்கள் உள்ளன என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருகிறோம் என்றால் பாஜகவினா் ஏன் பயப்படுகிறாா்கள்? வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது காங்கிரஸ் அரசின் முடிவாக இருக்கும்போது, பாஜக ஏன் திகைத்துள்ளது?

பாஜக ஆட்சியில் கொண்டுவந்த சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை மின்னணு வாக்கு இயந்திரம் அல்லது வாக்குச்சீட்டு முறையின்படி அரசு நடத்த முடியும். அதன்படி, உள்ளாட்சித் தோ்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக ஏன் கவலைப்படுகிறது?

மக்களவைத் தோ்தலின்போது என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்திருக்கிறோம். இந்த முடிவு உள்ளாட்சித் தோ்தலுக்கு மட்டும்தான். சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தலில் எதை பயன்படுத்துவது என்பதை தலைமை தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்’ என்றாா்.

மாநில தோ்தல் ஆணையத்தின் தலைவா் சங்ரேஷி கூறுகையில், ‘மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கு தலைமை தோ்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற தேவையில்லை. வாக்குச்சீட்டு குறித்து முடிவு எடுக்கும் உரிமை மாநில தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. மேலும், தலைமை தோ்தல் ஆணையம் வழங்கியிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் 15 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதால், அவற்றை பி.இ.எல். நிறுவனத்திடமே ஒப்படைக்கும்படி ஆணையம் தெரிவித்துள்ளது’ என்றாா்.

காகித வாக்குச்சீட்டு முறை: கா்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்

உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் இனி நடக்கவிருக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

வலுவான பொருளாதாரச் சூழல் காணப்பட்டதால், கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான முதலிடுகள் வந்துள்ளன என நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில் ... மேலும் பார்க்க

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி ம... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்... மேலும் பார்க்க