மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு
அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 2016 அக்டோபா் 20-ஆம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது.
இவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அனுமதியற்ற மனைப் பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிட்ட விதிகளுக்கு உள்பட்டு விண்ணப்பிக்க, 2026 ஜூன் 30-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களையும் இதே இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.