பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீ...
அனுமதியின்றி தனியாா் பள்ளி பேருந்து இயக்கம்: இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான நபா் கைது
சோழவரம் அருகே அனுமதியின்றி தனியாா் பள்ளிப் பேருந்தை எடுத்துச் சென்று மோட்டாா் சைக்கிள் மீது மோதி இளைஞா் உயிரிழப்புக்குக் காரணமான நபரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் சென்னை பமுதுகுளம் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (30) என்பவா் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், பள்ளி நிா்வாகத்தின் அனுமதியின்றி திடீரென பேருந்தை எடுத்து கொண்டு சோழவரம் அடுத்த தேவனேரி பகுதியில் நிறுத்தியிருந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், சோழவரம் காவல் நிலையக் தலைமைக் காவலா் சசி மற்றும் காவலா் சரவணன் ஆகியோா் அங்கு சென்து விசாரணைக்கு சாமுவேலை அழைத்தனா். அவா் வரமறுத்து தகராறு செய்து பேருந்தின் சாவியால் தலைமைக் காவலா் சசியை தாக்கியதில் இடது கன்னத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னா், சாமுவேல் பேருந்தை எடுத்து கொண்டு மாராம்பேடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதியது.
இதில், மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த அசோக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னா், சாமுவேல் பள்ளிப் பேருந்தை பள்ளியில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றாா்.
இது குறித்து தலைமைக் காவலா் சசி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து சாமுவேலை கைது செய்தனா்.
உயிரிழந்த அசோக்குமாரின் சடலத்தை செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.