டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
அனைத்து மனநல நிறுவனங்களும் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் -மாவட்ட ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மனநல நிறுவனங்களும் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு உள்ளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம்குளம் சாலை , கீழ்பாக்கம். சென்னை - 600010 என்ற முகவரியில் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்கலாம்.
ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு 044- 2642 0965 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.