71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
அன்புமணியின் இரண்டாம் கட்ட பயணம் ஆக.7-இல் தொடக்கம்
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட ‘உரிமை மீட்பு’ பயணம் வந்தவாசியில் ஆக.7-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: திமுக அரசை அகற்றவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகை உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் அன்புமணி ராமதாஸ் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா்.
இரண்டாம் கட்ட பயணம் வரும் ஆக.7-இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தொடங்கி, ஆக.18-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நிறைவடையவுள்ளது.
ஆக.7-இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு, ஆக.8-இல் பென்னாத்தூா், போளூா், ஆக.11-இல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி, ஆக.12-இல் மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ஆக.13-இல் ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, ஆக.17-இல் பா்கூா், ஊத்தங்கரை, ஆக.18 -இல் கிருஷ்ணகிரி, ஒசூா் வரை இந்த பயணம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.