செய்திகள் :

"அப்பாவி மக்கள்மீது பழிபோடுவதா..." - 207 அரசுப் பள்ளிகள் மூடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

post image

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.

5 வயது நிரம்பிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இப்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

அந்த அறிக்கையில், "கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தவொரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் ?

குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.

மேலும், அரசுப் பள்ளிகளின் அருகிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையால், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதிலேயே பாதை மாறுகின்ற நிலையைப் பற்றியும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்காத பொம்மை முதலமைச்சர், தற்போதுதான் மாணவர்களை ‘போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று விளம்பரங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாகச் செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் 17, சிவகங்கை 16, திண்டுக்கல் - 12, சென்னை 10, ஈரோடு 10, மதுரை 10, கோவை 9, ராமநாதபுரம் 9, தூத்துக்குடி 8, தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா - 7, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 6 என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகளை இந்த பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு மூடியுள்ளது. ‘இந்த 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால்' மூடப்பட்டு வருவதாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசோ, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களைத் தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது.

இச்செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.840 கோடி; RTI மட்டும் இல்லையென்றால்.!’ - சுதர்சன நாச்சியப்பன்

மதுரையில் அரசியல் கட்சிகளின் மாநாடு, சாதி மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்ததை பார்த்த நமக்கு, 'தகவல் பெறும் உரிமைச் சட்ட' ஆர்வலர்கள் நடத்திய மாநாட்டுக்கு ஆர்வலர்கள் திரண்டு வந்ததது ... மேலும் பார்க்க

'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னையில் இராயபுரம், திருவிக ந... மேலும் பார்க்க

Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாராத்தில் இந்த இருவரைத் தவிர வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பது குறித்து விளக்குகிறது இந்த வீட... மேலும் பார்க்க

`பாசக்கரம் நீட்டும் ராமதாஸ் டு மன்னர் புள்ளிகளைத் தேடும் கழகங்கள்!’ | கழுகார் அப்டேட்ஸ்

கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்!எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து...மலர்க் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள ‘சக்கர’ புள்ளி ஒருவர், சூரியக் கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ ஒருவரைத் தனது படை, பரி... மேலும் பார்க்க

துணை முதல்வர் பதவி: `அண்ணன் துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக’ - எடப்பாடி பழனிசாமி சூசகம்

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 13) மாலை திருப்பத்தூர் மாவட்டத்தில் `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பத்... மேலும் பார்க்க