செய்திகள் :

அப்போ டாக் பாபு... இப்போ கேட் குமார்.! பூனைக்கு இருப்பிடச் சான்றிதழா..?

post image

பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே நாய், காகம், சோனாலி டிராக்டர், ஏன்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில்கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து பரபரப்பையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இவை அனைத்தும் சொல்லிவைத்தது போல பிகார் மாநிலத்திலேயே நடைபெற்றிருப்பதுதான் ஆச்சரியமான உண்மை.

பிகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆதார் அட்டையோ, குடும்ப அட்டையோ, வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணமல்ல, இருப்பிடச் சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியாக ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த முறை பாட்னாவின் முசோரியில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முறை ரோஹ்தக் மாவட்டத்தில் கேட்டி பாஸ், கேட்டியா தேவி என்ற தம்பதியினரின் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படம், டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிமிகஞ்ச் கிராமம், வார்டு எண் 7, மகாதேவா(போஸ்ட்), நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்துக்குள்பட்ட 821310 என்ற அஞ்சல் குறியீட்டு எண் முகவரியுடன் கூடிய விண்ணப்பத்தில் பூனையின் புகைப்படமும் இருந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, நஸ்ரிகஞ்ச் வருவாய் அதிகாரி கௌஷல் படேல் ஜூலை 29 ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாருக்குப் பின்னர் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததன் அடிப்படையில், ரோஹ்தக் மாவட்ட ஆட்சியர் உதித்தா சிங் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

After 'Dog Babu' And 'Donald Trump', 'Cat Kumar' Applies For Bihar Residency

இதையும் படிக்க :இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக... மேலும் பார்க்க

இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!

இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்துவருவதையும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு மௌனமாக நிற்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸின் மக்களவை குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.குஜராத் மற்றும் மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்: 66 பேர் மாயம்! அதிநவீன கருவிகள் மூலம் தேடும் பணிகள் தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் மாயமான 66 பேரை, தேடும் பணிகளில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாப்பதை நிறுத்த மாட்டோம்! ராகுல் காந்தி

அரசியலமைப்பை தொடர்ந்து பாதுகாப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ... மேலும் பார்க்க