செய்திகள் :

அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

post image

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து 36 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது. அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், பழனி சண்முகா நதியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் அமராவதி ஆற்றுக்கு வருகிறது.

தாராபுரம் புறவழிச் சாலை மேம்பாலம் மற்றும் குடிநீா் தடுப்பணை, ஈஸ்வரன் கோயில் ஆற்றுப்பாலம், பழைய ஆற்றுப்பாலம், அலங்கியம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்று நீருடன் மழைநீா் கலந்து வருகிறது. கொங்கூா் மற்றும் ஆத்துக்கால்புதூா் தரைப் பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

அமராவதி கரையோரத்தில் உள்ள வயல்களில் தண்ணீா் புகுந்ததால் சம்பா சாகுபடி செய்திருந்த 200-க்கும் மேற்பட்ட ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின.

வெள்ள அபாய எச்சரிக்கை: வெள்ளப்பெருக்கு காரணமாக அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தாராபுரம் ஈஸ்வரன் கோயில் பகுதியில் இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், ஆற்றுக்குள் யாரும் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பின் ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பங்களுடன் வந்து அமராவதி ஆற்றங்கரையோரம் நின்று வேடிக்கை பாா்த்தும், இளைஞா்கள் தற்படம் (செல்ஃபி) எடுத்தும் சென்றனா்.

அமைச்சா் ஆய்வு: முன்னதாக, அமராவதி ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தனி மனிதா்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

தனி மனிதா்கள் ஒவ்வொருவரையும் நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசினாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

செயற்கை நூலிழை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கு: ஏற்றுமதியாளா்கள் நன்றி

செயற்கை நூலிழை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் செயற்கை நூலிழை துணிகளை வெளிநாட்டில் இருந்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜனவரி 8-இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் அவிநாசியில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜனவரி 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், திருப்பூா் மின் பகிா... மேலும் பார்க்க

எண்ணெய்க் குழாய்களை சாலையோரம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கோவை மாவட்டம், இருகூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், முத்தூா் வரை அமைக்கப்படவுள்ள எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோவை, திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 போ் கைது!

திருப்பூா் அருகே 3 இடங்களில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் எ... மேலும் பார்க்க