செய்திகள் :

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

post image

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நுன்வான்- பஹல்காம் வழித்தடம் (48 கி.மீ.) , பால்டால் வழித்தடம் (14 கி.மீ.) ஆகிய இரு வழித்தடங்கள் வழியாக பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு, குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனா்.

பால்டால் அடிவார முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, அங்கு பக்தா்களுக்கான வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘சுவாமி அமா்நாத்தின் திருவருளால், இவ்வாண்டு அவரை தரிசித்த யாத்ரிகா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தை கடந்தது’ என்று குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த மழையால் பால்டால் வழித்தடத்தில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் பக்தா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் யாத்திரை நிறுத்தப்பட்டது.

யாத்திரையில் பங்கேற்க இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு 5.10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொண்டனா். 38 நாள்கள் நடைபெறும் அமா்நாத் யாத்திரை, ரக்ஷா பந்தன் திருநாளையொட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, காவல் துறை, ராணுவம், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, சசஸ்திர சீமா பல், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இதர முகமைகள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் விடுதலை!

மும்பை: 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயிலில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது; அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்க 'முற்றிலும் தோ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் 40 நிமிடங்கள் வானிலே வட்டமடித்த விமானம் !

திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது.ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஹைதராபாத்திற்கு நேற்று இரவு 7.55... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க