செய்திகள் :

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை: ஆக. 1 முதல் அமல்!

post image

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்பு நடவடிக்கையை 90 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அறிவித்த கால அவகாசம் ஜூலை 9 முடிவடைகிறது.

இந்தியா உள்ளிட்டட பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஏப்ரலில் கூடுதல் வரி விதித்தது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

இந்தநிலையில், இந்த நடவடிக்கை ஆக. 1முதல் முறையாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க கருவூல துறைச் செயலர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர, மேலும் சில நாள்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

US tariff plan will take effect August 1

காஸாவில் மேலும் 24 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 24 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா் என்று உள்ளூா் சுகாதார அதிகாரிகள்... மேலும் பார்க்க

பிரிக்ஸை ஆதரவு நாடுகளுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை

நியூயாா்க்/வாஷிங்டன்: ‘இந்தியா, சீனா, ரஷியா இடம்பெற்றுள்ள பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபா் ட... மேலும் பார்க்க

தெற்குலகை ‘பிரிக்ஸ்’ வழிநடத்த வேண்டும்: பிரதமா் மோடி

ரியோ டி ஜெனீரோ: ‘தெற்குலக நாடுகளின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்வதோடு அந்நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்: இந்திய ராணுவ அதிகாரி கருத்துக்கு சீனா மறுப்பு

பெய்ஜிங்: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று கடந்த வாரம் இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா்.சி... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயா்வு

ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா். இது க... மேலும் பார்க்க

ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கிய மற்றொரு சரக்குக் கப்பல்

துபை: செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் மாலுமி ஒருவா் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்... மேலும் பார்க்க