செய்திகள் :

அமெரிக்காவில் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் சட்டவிரோதமாக நுழைந்தவர்!

post image

அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய - அமெரிக்க சமூக தொழில்முனைவோரான குணால் ஜெயின் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விடியோவில், ஹரியாணைவைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்திய மாணவரை தரையில் மண்டியிட வைத்து அவருடைய கைகளில் விலங்கு போடப்பட்டதாகவும், கதறி அழுத அந்த மாணவனை ஒரு குற்றவாளி போன்று நடத்தியதாகவும் குணால் ஜெயின் தெரிவித்திருந்தார்.

இந்த காணொலி இணையத்தில் வைரலாகி இந்திய மாணவரை அமெரிக்கா மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த மாணவரின் நடத்தை பயணத்துக்கு உகந்ததல்ல என்று நியூவேர்க் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞர் பயணத்துக்கு தகுதியானவர் என்று சான்றிதழ் கிடைத்தவுடன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எந்த சம்பவத்தையும் குறிப்பிடாமல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம்,

“அமெரிக்காவுக்குள் சட்டப்பூர்வமாக பயணிப்போரை வரவேற்கிறோம். சட்டவிரோத பயணம் அல்லது விசாவில் முறைகேடு செய்து பயணிப்பது அமெரிக்க சட்டத்தை மீறுவதாகும். அதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சலீஸ்! அமைதி திரும்புமா?

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா். அகமதாபாத்... மேலும் பார்க்க

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க