செய்திகள் :

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்: நீதி ஆயோக்

post image

புது தில்லி: சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க சந்தையில் பொருள்களின் எண்ணிக்கை மற்றும் அளவில் இந்தியாவின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.

சீன பொருள்களுக்கு 30 சதவீதம், கனடா பொருள்களுக்கு 35 சதவீதம், மெக்ஸிகோ பொருள்களுக்கு 25 சதவீதம் என பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதியின் 30 பிரிவுகளில் உள்ள 22 பிரிவுகளில் இந்தியாவுக்குப் போட்டித்தன்மை பெருகக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தப் பிரிவுகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா, கனடா, மெக்ஸிகோ முன்னணியில் உள்ளன.

அமெரிக்காவுக்கு கனிமங்கள் மற்றும் எரிபொருள்கள், ஆடைகள், மின்னணு கருவிகள், பிளாஸ்டிக், கடல் உணவுகள், அறைகலன்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா லாபம் அடைய வாய்ப்புள்ளது. அவற்றின் அமெரிக்க சந்தை மதிப்பு 1,265 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.10,880 கோடி).

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கவும், ஏற்றுமதியில் போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை தோல், காலணி, அறைகலன், கைவினைப் பொருள் உள்ளிட்ட துறைகளுக்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் சேவைகள் துறையை சாா்ந்ததாக இருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை இந்தியா அளிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைகளைத் தொடர, மத்திய வா்த்தக அமைச்சக குழு அமெரிக்கா தலைநகா் வாஷிங்டனுக்கு சென்றுள்ளது.

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜ... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்ப... மேலும் பார்க்க

சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜார்க்கண்டு மாநிலத்தில் 19 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்ஹவா, பலாமு, சத்ரா, லட... மேலும் பார்க்க

கல்லூரிக்குள் மாணவிக்கு கத்திக்குத்து!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர் மாணவியைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.அலிகார் மாவட்டத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ... மேலும் பார்க்க

கணவரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த மனைவி! காட்டிக்கொடுத்த தடயம்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறில், கணவரைக் கொன்று, வீட்டுக்குள்ளேயே 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, புதைத்துவிட்டு, கேரளத்துக்கு அவர் வேலைக்குச் சென்றுவிட்டதாக நாடகமாடிய சம்பவம... மேலும் பார்க்க